திருப்புத்துாரில் திருவிளக்கு பூஜை



தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்து வருகிறது. பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். ஏராள மானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.

திருப்புத்துார்: திருப்புத்துார் நாகராஜன் நகர் முத்து எடுத்த முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்தி அம்மனை வழிபட்டனர்.

இக்கோயிலில் மார்ச் 24ல் காப்புக்கட்டி விழா துவங்கியது. நான்காம் திருநாளை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சன்னதியில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.

மார்ச் 31ல் பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதலாக பால்குடம், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் நடை பெறும்.

மறுநாள் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்