ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா; வெள்ளி தேரோட்டம் விமரிசை



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ஆண்டு வெள்ளி தேர் உத்சவம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவின் வெள் ளி தேர் உத்சவம், கடந்த 1950வது ஆண்டு முதல், தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு வெள்ளி தேர் உத் சவம் 75வது ஆண்டு, பவள விழாவாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. உத்சவத்தையொட்டி சங்க சமுதாய கூடத்திலிருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஏகாம்பரநாதருக்கு அபிஷேக வைபவம் நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட வெ ள்ளி தேரில், ஏலவார்குழலியுடன் எழுந்தருளிய ஏகாம்பரநாதர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இது, 75வது ஆண்டு விழா என்பதால் வழக்கத்தைவிட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளி தேரோட்டத்தில் பங்கேற்றனர்.தேரோட்டத் திற்கான ஏற்பாட்டை சங்க தலைவர் டாக் டர் தில்லை பாஸ்கர், பொறுப்பு செயலர் சண்முகம், பொருளர் கார்த்திகேயன், வெள்ளி தேர் விழா குழு தலைவர் ஞானஒளி, செ யலர் கலைமணி உள்ளிட்டோர் செய் திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்