சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. வரும் 1ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது
இன்று காலை 7மணிக்கு தொடங்கிய லட்சார்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதைத்தொடர்ந்து மாலையில் யாகசாலை பூஜைகள் நடக்கிறது நாளை மறுநாள் மாலையுடன் இலட்சார்ச்சனை பூர்த்தியாகிறது வருகிற 1ந் தேதி பங்குனி உத்திரத்தன்று உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடக்கிறது 2ந் தேதி முதல் 4ந் தேதி வரை 3 நாட்களும் இரவு 7 மணிக்கு திருக்குளத்தில் தெப்ப தேர் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரி நடக்கிறது இதில் முதல் நாள் வடபழனி ஆண்டவர் புறப்பாடும், இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி தெய்வானை புறப்பாடும் மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.