பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை பானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்துவங்கியுள்ளது. இதனால் மக்கள் காலை நேரத்தில், பொதுவெளியில் செல்வதை பெருமளவு தவிர்க்கிறார்கள்.
இதனால் விசேஷ காலங்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி, கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுவையான எலுமிச்சை பானம் வழங்கப்படுகிறது.
இந்த ஏற்பாட்டினை கோவில் தக்கார் ராஜ்குமார், செயல் அலுவலர் சாமிநாதன் ஆகியோர் செய்தனர்.