மும்பை மாட்டுங்கா ஸ்ரீசங்கர மடத்தில் மகாகும்பாபிஷேகம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி



மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் செய்து வைத்தார்.


காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் நேன்று மும்பை செம்பூரில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்றார். விஷே பூஜைகளுக்குப் பிறகு, பக்தர்களுக்கு அனுக்ரஹ பாஷணம் கொடுத்து அருள்பாலித்தார். தொடர்ந்து இன்று மும்பை மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் செய்தார். முன்னதாக, யாகசாலையில் சுவாமி முன்னிலையில் பூர்ணாஹுதி நடைபெற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அனுக்ரஹ பாஷணம் செய்து சுவாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்