முக்கனிகளோடு புத்தாண்டை வரவேற்க தயாரான மக்கள்



உடுமலை: முக்கனிகளோடு, தமிழ் புத்தாண்டை வரவேற்க தயாரான மக்களால், பழம் மற்றும் பூக்கள் விற்பனை இன்று உடுமலையில் ஜோராக நடந்தது.


தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கிறது. மா, பலா வாழை என முக்கனிகளை வைத்து, வீடுகளில் வழிபாடு செய்து, தமிழ் புத்தாண்டை மக்கள் வரவேற்கின்றனர். புத்தாண்டு வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க, மக்கள் நேற்று உடுமலை நகரில் திரண்டனர். இதில், செவ்வாழை, பூவன் உள்ளிட்ட ரகங்கள் கிலோ, 60–70 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பலாப்பழம், 200–500 ரூபாய் வரை விற்பனையானது. இதே போல், மல்லி மற்றும் முல்லை பூக்கள் விற்பனையும் ஜோராக நடந்தது. மல்லி கிலோ, ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை கிலோ, 850 ரூபாய் என விலை நிலவரம் இருந்தது. இதே போல், சித்திரை திருநாளை வரவேற்கும் விதத்தில், பூத்துக்குலுங்கும் மஞ்சள் சரக்கொன்றை மலர்களையும், வழிபாட்டுக்காக மக்கள் பறித்துச்சென்றனர். கிராம கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிக்கு செலுத்துவார்கள். இதற்காக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் திரண்டனர்.  கோவில் அருகிலுள்ள பாலாற்றில், தீர்த்தம் எடுத்துச்சென்றனர். இதே  போல் இன்றும் புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்