மதுரை: துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ராதாகிருஷ்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழாக்களின்போது அதிக பக்தர்கள் வருகின்றனர். குடிநீர், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ உதவி, தங்குமிடம், போக்குவரத்து, தீயணைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை கமிஷனர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், மதுரை, விருதுநகர் கலெக்டர்கள், கோயில் செயல் அலுவலருக்கு 2015 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர் அசோக்,‛தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன,’ என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், ‛இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது,’ என்றனர்.