ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள ஒற்றை பனை மரத்து காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்.,7ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் பால்குடம், அலகு குத்தியும், காவடி, அக்னி சட்டிகள் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம், மஞ்சள், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.