​சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் லட்சதீப விழா



புதுச்சேரி: கைக்கிலப்பட்டு சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், லட்சதீப விழா, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு கிராமத்தில் விஸ்வரூப சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 35ம் ஆண்டு மகோற்சவ லட்சதீப விழா நேற்று நடந்தது. இதையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு ஹோமம் லச்சார்ச்சனை, காலை 10:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை 4:30 மணிக்கு சீதை, ராமர் திருக்கல்யாண உற்சவம், மாலை 6:00 மணிக்கு குளக்கரை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். இதேபோல், வாதானுார், மணலிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலிலும் லட்ச தீப விழா நடந்தது. 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்