காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் செங்கற்களால் நடைபாதை அமைப்பு



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக செங்கற்களால் ஆன நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில், முதலாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்ம பல்லவனால், கி.பி., 700 – 728ம் ஆண்டில், ‘சான்ட் ஸ்டோன்’ எனப்படும், பிண்டிக்கல் வகை மணற்கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர், பக்தர்கள் மட்டுமின்றி அதிகளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரும் வந்து செல்கின்றனர். பக்தர்கள் செல்லும் பாதையில் கருங்கற்களால் ஆன பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், வெயில் நேரத்தில் நடந்து செல்லும் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதனால், கருங்கல் பாதை அகற்றப்பட்டு, செங்கற்களால் ஆன பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவலிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழித்தடத்தில் செங்கற்களால் ஆன பாதை அமைக்கப்படுகிறது. மேலும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளாக குடிநீர், கழிப்பறை வசதியும், அமர்வதற்கான இருக்கை வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. கோவில் வளாகம் முழுதும் இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளிரும் வகையில் வண்ணமயமான மின்விளக்குகளும் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இப்பணி அனைத்தும் இரு மாதங்களில் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்