அன்னூர்: குளத்துப்பாளையம், பரமசிவன் கோவில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
பொகலூர் அருகே குளத்து பாளையத்தில் பழமையான பரமசிவன் கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.இதையடுத்து மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெற்று நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. பரமசிவனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து அட்டப்பாடியைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடி மக்களின் தனித்துவமான பாரம்பரிய நடனம் நடந்தது. வித்தியாசமான பாரம்பரிய நளினமான இந்த நடனத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.