சித்திரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்



பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தலைமை அர்ச்சகர் சேஷன் அய்யங்கார் கொடியை ஏற்றினார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் நரசிம்மன் தலைமையில் தலைமை எழுத்தர் ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விரதமிருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஏப். 28ல் திருக்கல்யாணம், 30ல் வரதராஜபெருமாள் தங்க குதிரை வாகனத்தில் சன்னதியிலிருந்து புறப்பட்டு, மே 1 காலை அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்குதல், மே 2ல் தசாவதாரம், மே 3ல் கருடாழ்வார் வாகனத்தில் அய்யம்பாளையம் நகர்வலம், மே 4ல் பூப்பல்லக்கில் நகர்வலம், மே 5ல் மஞ்சள் நீராடி சன்னதி வந்தடைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்