அட்சய திருதியை: காலடி கிருஷ்ணன் கோவிலில் மகா லட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம்



மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை முன்னிட்டு மகா லட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் நடைபெற்றது.


காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை முன்னிட்ட கனகதாரா யக்ஞம் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று முன்னிட்டு மகா லட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் நடைபெற்றது. அத்வைத வேதாந்தத்தை தோற்றுவித்த மகான் ஆதிசங்கரர், குழந்தை பருவத்தில் உபநயனத்தின் ஒரு பகுதியாக ஏழை பெண் ஒருவரிடம் பிட்சை கேட்டார். அப்பெண் நெல்லிக்கனி வழங்கியதை கண்டு மனமுருகி, லட்சுமி தேவியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். 19வது ஸ்லோகத்தின் முடிவில் தங்க நெல்லிக்கனிகள் மாரியாக பொழிந்தன. அதன் நினைவாக, இன்று கோயில் வளாகத்தில் உள்ள கனகதாரா யக்ஞ மண்டபத்தில் தங்கம், வெள்ளியால் ஆன நெல்லிக்கனிகள், கனகதாரா யந்திரங்கள் வைக்கப்பட்டு, 32 அர்ச்சகர்கள் 10 ஆயிரத்து 8 முறை கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்தனர். இதனால் சக்தி பெறும் தங்க நெல்லிக்கனிகளை கொண்டு இன்று ஏப்., 20 அட்சய திருதியை அன்று காலை 9:00 மணிக்கு லட்சுமி தேவிக்கு கனகாபிஷேகம் செய்யப்பட்டது. பாலக்காடு கிருஷ்ண நம்புதிரி பூஜைகளை நடத்தி வைத்தார். அதன்பின் அதிர்ஷ்டம், செல்வ வளம் அளிக்கும், அபிஷேகம் செய்யப்பட்ட தங்க நெல்லிக்கனிகள், யந்திரங்களை பக்தர்கள் வாங்கிச் சென்றனர். விவரங்களுக்கு 93888 62321 ல் தொடர்பு கொள்ளலாம்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்