63 நாயன்மார்கள் கிரிவல உத்சவம் திருக்கழுக்குன்றத்தில் கோலாகலம்



திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், வெள்ளி அதிகார நந்தி வாகன வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட சுவாமியை தரிசித்தவாறு, கோலாகல கிரிவலம் சென்றனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று 63 நாயன்மார்கள், கோலாகலமாக உத்சவமாக கிரிவலம் சென்றனர்.


உத்சவத்தை முன்னிட்டு, காலை, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமியர், கோவிலில், சிறப்பு அபிஷேகம் கண்டு, தீபாராதனை ஏற்றனர். அதைத்தொடர்ந்து, 4:00 மணிக்கு, வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் சுவாமியர், அலங்கார சப்பரங்களில் 63 நாயன்மார்களுடன் வடக்கு ராஜகோபுரம் வழியா, வேதமலை கோவில் அடிவாரத்தை அடைந்தனர். அதன்பின் கிரிவல பாதையில் அணிவகுத்து, நாயன்மார்கள், வேதகிரீஸ்வரரை தரிசித்து, கோலாகலமாக கிரிவலம் சென்று, காலை 6:00 மணிக்கு, கோவிலை அடைந்தனர். பக்தர்கள் திரண்டு, கிரிவலம் சென்று, சுவாமியரை தரிசித்து வழிபட்டனர். நேற்று, சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவும் நடந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, உத்சவ அனுமதி குறித்து, தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டது. செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன், கோவில் நிர்வாகத்துடன் ஆலோசித்து, தேர்தலுக்கு இடையூறின்றி நடத்த அறிவுறுத்தினார். எனவே, வழக்கமாக காலை 8:00 மணிக்கு பிறேகே, கிரிவலம் துவங்கி, அப்பாதையில் பக்தர்கள் அர்ச்சித்து, மாலையில், சுவாமியர் கோவிலை அடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்