பண்ருட்டி: வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
பண்ருட்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் இன்று சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு திருக்கொடியேற்றம், உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை இந்திர விமானத்தில் திருவீதியுலாவும் நடந்தது. நாளை காலை உற்சவர் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம், மாலை சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா; நாளை 25 ம்தேதி காலை உற்சவர் சிறப்பு உள்புறப்பாடு; மாலை அனுமந்த வாகன வீதியுலா; நாளை மறுநாள் 26ம்தேதி மாலை சேஷவாகன புறப்பாடு; 27 ம்தேதி மாலை பெரிய கருடவாகன வீதியுலா; 28 ம்தேதி மாலை யானை வாகன வீதியுலா; 29 ம்தேதி திருக்கல்யாண உற்வசம் திருப்பல்லக்கில் திரு வீதியுலா; 30 ம்தேதி பெரிய குதிரை வாகன வீதியுலா; 1 ம் தேதி சித்திரை பவுர்ணமி முன்னிட்டு அதிகாலை 5:30 மணிக்குமேல் 6:30 மணிக்குள் திருத்தேர் புறப்பாடு;. 2ம்தேதி காலை தீர்த்தவாரி, மாலை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.