சிறுமுகை அருகே இரணியன் தெருக்கூத்து நாடகம்: விடிய விடிய கண்டு ரசித்த கிராம மக்கள்



மேட்டுப்பாளையம்:  சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையத்தில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில்  கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டியும் உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும்  வெள்ளிகுப்பம்பாளையம் இரணிய நாடக சபா குழுவினர் சார்பில் பக்தியில் சிறந்த பிரகலாதன் கதையான இரணிய நாடகம் சிறப்பாக நடைபெற்றது.. வள்ளி கும்மி ஆசிரியர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில்  தெருக்கூத்து கலைஞர்கள்  பங்கேற்று பின் பாட்டுடன்  இரணிய நாடகத்தில் காண்போர் வியக்கும் வண்ணம் தத்ரூபமாக நடித்து அசத்தினர்.  நேற்று  இரவு 10 மணிக்கு தொடங்கிய நாடகம்  காலை 8 மணி அளவில் நரசிம்மர் இரணியனை வதம் செய்த நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. வெள்ளிக்குப்பம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விடிய விடிய விழித்திருந்து இரணியன் நாடகத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். தேவாங்க குல பெருமக்களின் குலதெய்வமான ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் விழா குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்