திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்.



காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். தற்போது அனைத்து பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பெறும் ஆவதிப்பட்டு வரும் நிலையில் இன்று திருநள்ளார். சனீஸ்வரபகாவன் கோவிலில் சனிக்கிழமையில் என்பதால் பக்கர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து அதிகமாக காணப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் கோடை விடுமுறையை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவதால் அவர்கள் தாகம் தணிக்கும் வகையில் குளிர்நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. 


வரிசையில் வரும் பக்தர்கள் சற்றுஇளைப்பாறி செல்லும் பொருட்டு தற்காலிக நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி தேவையான இடங்களில் வெப்பத்தை தாங்கும் வண்ணம் பிரகாரம் வலம்வரும் பாதையில் தரை விரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அன்னதானம்,மும் ஆலய உள்புரங்களில் கூடுதல் மின்விசிறி மற்றும் குளிர்சாதன வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தாய்மார்கள் வசதிக்காக பிரத்யேகமாக பாலூட்டும் தனி அறைகள் தேவஸ்தான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகள் அவரது உதவியாளருடன் சுவாமி தரிசனம் செய்வதற்கும் வரிசையில் வரும் பக்தர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் எந்தவித சிரமமின்றி சனீஸ்வரபகவான் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்