காஞ்சிபுரம் கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழா



காஞ்சிபுரம்: பல்வேறு கோவில்களில், சித்ரா பவுர்ணமி விழா நேற்று இரவு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், அகிலாண்டேஸ்வரர் சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், அகிலாண்டேஸ்வரர் சமேத கைலாசநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி ஆற்றுத் திருவிழா நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு நடந்தது. உத்சவத்தை முன்னிட்டு மலர் அலங்காரத்தில், அகிலாண்டேஸ்வரர் சமேத கைலாசநாதர் எழுந்தருளி விருத சீர நதி ஆற்றில் எழுந்தருளினார். அதேபோல, வாலாஜாபாத் ஜோதி கன்னியம்மன் கோவிலிலும், சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்