எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சித்திரை திருவிழாவில் திருவேங்கடப்பெருமாள் சீர்வழங்கும் நிகழ்ச்சியும், எதிர்சேவையும் நடந்தது.
தமிழ்நாட்டில் சைவம், வைணவ பாகுபாடின்றி இணைந்து வழிபாடு நடத்தும் விதமாக பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக எழுமலையில் மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சித்திரை திருவிழாவில் திருவேங்கடபெருமாள் சீர் வழங்குதல், எதிர்சேவை வழிபாடு நடக்கிறது. இதற்காக நேற்று சுப்பிரமணியரும், பெருமாளும் எழுமலை ராஜகணபதி கோயில் அருகே எழுந்தருளினர். சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் மண்டகப்படியில் தங்கி அருள்பாலித்தனர். இன்று காலை பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சிக்குப்பின் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. எழுமலை பெரிய கண்மாய் பகுதிக்கு நகர்வலமாக வந்து அங்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.