விருதுநகர்: வத்திராயிருப்பு கிழவன் கோவில் தர்மசாஸ்தா கோயிலில் வருடாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் துவங்கி நடந்தது.
உலக நன்மைக்காக ஸ்ரீ சாஸ்தா பிரீதி என்ற நிகழ்வில் இறைவனை திருவிளக்கில் எழுந்தருள செய்து கம்பங்குடி குடும்பத்தாரின் வாரிசுகள் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினர்.
ஏற்பாடுகளை ராமசுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், சத்திய நாராயணன், ஸ்ரீகுமார், பாலாஜி, அருண், சுப்பிரமணியன் ஆகியோர் செய்தனர்.