புதுச்சத்திரம்: ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது.
இதையொட்டி, கடந்த 27ம் தேதி காலை 5:00 மணிக்கு லஷ்மி ஹோமம், திரு மஞ்சனம், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை, 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து, 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது.
29 ம் தேதி மாலை 6:00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் அவதாரத்தில் சுவாமி வீதி உலா, 3ம் தேதி மாலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகாதீபாராதனை நடந்தது.
சிறப்பு விழாவான திருக் கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி மாலை 3:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.