திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானம்: ஆகஸ்ட் மாதத்திற்கான ஆன்லைன் தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான பல்வேறு சேவைகள், தரிசனம் மற்றும் தங்குமிடங்களுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை வெளியிடும் தேதிகள் பின்வருமாறு: ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்: (சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மாராதனை சேவை) மே 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இதற்கான எலக்ட்ரானிக் டிப் முறைப் பதிவு மே 20-ஆம் தேதி காலை 10 மணி வரை திறந்திருக்கும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மே 20 முதல் மே 22-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவை: இதற்கான டிக்கெட்டுகள் மே 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். வருடாந்திர பவித்ரோற்சவம் இதற்கான டிக்கெட்டுகள் மே 21 காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
விர்ச்சுவல் சேவைகள் மற்றும் தரிசன இடங்கள்: மே 21-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அங்க பிரதட்சணம் டோக்கன்கள்: மே 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள்: மே 23 காலை 11 மணிக்கு வெளியிடப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தரிசனம்: மே 23 மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்: மே 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். திருப்பதி மற்றும் திருமலை தங்குமிட ஒதுக்கீடு: மே 25-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் ஸ்ரீவாரி ஆஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.