நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில் சொர்ண பைரவருக்கு நடந்த சிறப்பு வழிபாடு நடந்தது.
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சொர்ண பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து பைரவருக்கு சங்காபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சொர்ண பைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.