சீர்காழி சட்டநாத சுவாமி கோயிலில் முத்துசட்டை நாதர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு



மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாத சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக முத்துசட்டை நாதர் சுவாமிக்கு 70 வது ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  இதில்  தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோயில் உள்ளது . இக்கோயிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைக்கோயிலில் தோணியப்பர் உமா மகேஸ்வரி அம்மன், சட்டை நாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர். இங்கு சிவபெருமான் லிங்கம், மூர்த்தம், சங்கமம் என்ற மூன்று நிலைகளில் காட்சி தருகிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் திருஞானசம்பந்த பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய நிகழ்வு ஆண்டு தோறும் திருமுலைப்பால் உற்சவம் ஆக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய மற்றும் நிறைவு நாள் உற்சவமாக முத்து சட்டைநாத சுவாமிக்கு 70 வது ஆண்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. முன்னதாக முத்து சட்டை நாதர் சுவாமி எதா ஸ்தானத்திலிருந்து சிறப்பு வழிபாட்டிற்காக மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வசந்த மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு ஹோமம் பூர்ணாஹூதி  நடைபெற்று முத்து சட்டை நாதர் சுவாமிக்கு மஞ்சள் திரவிய பொடி இளநீர் தேன் பால் தயிர் பன்னீர் சந்தனம் விபூதி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு நறுமண திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது . இதில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.  விழா ஏற்பாடுகளை  பிராமணர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்