திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் கர்நாடக துணை முதல்வர் தரிசனம்



காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் தரிசனம் செய்தார்.

காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்ேயஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் கடந்த மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடந்தது.

நேற்று இக்கோவிலுக்கு வருகை தந்த கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் காலை 11:00 மணிக்கு வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உள்ள ஹெலிபேட் மைதானத்திற்கு வருகை தந்தார். அவரை துணை கலெக்டர் பூஜா வரவேற்றார்.

பின், திருநள்ளாறு கோவிலுக்கு சென்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே., சிவக்குமாரை கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் வரவேற்றார். பின், தார்பாரண்யேஸ்வர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார்.

பின், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சனீஸ்வர பகவானுக்கு நடந்த சிறப்பு அபிேஷகத்தில் கலந்துகொண்டார். பின், 9 தீபங்கள் ஏற்றி சனி பகவானை சிறப்பு தரிசனம் செய்த அவர், கோவில் யானையிடம் ஆசிபெற்றார். மதியம் 12:45 மணிக்கு புறப்பட்டு சென்றார். காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்