காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் 19ல் தேரோட்டம்



காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு 19ம் தேதி முக்கியத் திருவிழாவான தேரோட்டம் நடைபெறுகிறது.

காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா, கடந்த மே 12 காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில், தினமும் காலை 9 மணிக்கு வெள்ளிக்கேடயதில் அம்பாள் புறப்பாடும் பக்தி உலாவும் இரவு தீபாராதனையும், பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு தேரோட்டமும் நன்பெறுகிறது. மே 20ம் தேதி காலை 9 மணிக்கு தேர் புறப்பட்டு கொப்புடையநாயகி அம்மன் கோயில் திரும்பும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மே 22ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும் மறுநாள் அதிகாலை புஷ்ப பல்லாக்கும் நடைபெறுகிறது. 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்