எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்யப்படுவதே உண்மையான சேவை; குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர்



பெங்களூரு; எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்யப்படும் சேவையே உண்மையான சேவை என்று குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறி உள்ளார்.

பெங்களூருவில் உள்ள ஆர்ட்ஆஃப் லிவிங் அமைப்பின் 45வது ஆண்டு விழா மற்றும் குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் 70வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில், கர்நாடகா கவர்னர் தாவர்சந்த் கெலாட்,, காமன்வெல்த் செயலக மூத்த இயக்குநர் சுரேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது; குழந்தைகள் கல்வி முதல் நதிகளுக்கு புத்துயிர் ஊட்டுதல்,  ரசாயனமற்ற விவசாயம், பேரிடர் நிவாரணம் என தி ஆர்ட் ஆஃப் லிவிங் இந்தியாவிலும் உலகெங்கிலும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு தளமாக உருவெடுத்துள்ளது. யோகா, தியானம், பிராணாயாமம் மற்றும் குறிப்பாக சுதர்ஷன் கிரியா ஆகியவற்றின் மூலம், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் புதிய ஆற்றலையும் நேர்மறை சிந்தனையையும் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் புகுத்தி உள்ளார். பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை மன அழுத்தமற்ற, வன்முறை இல்லாத மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ மக்களிடம் மாற்றத்தை குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கொண்டு வந்துள்ளார். இவ்வாறு கவர்னர் தாவர் சந்த் கெலாட் பேசினார்.
 
மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் பேசியதாவது; ஜார்க்கண்டின் நான்கு கோடி மக்கள் சார்பாகவும், ஒட்டுமொத்த மாநிலம் சார்பாகவும் எனது வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். தேவை எழும் போதெல்லாம், இந்த மண் குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற மாபெரும் மகான்களை உருவாக்கியுள்ளது.  தியானம் குகைகளிலும் இமயமலையிலும் மட்டுமே செய்யப்படுகிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர், ஆனால் நீங்கள் தியானத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு வந்துள்ளீர்கள். இவ்வாறு இணையமைச்சர் சஞ்சய் சேத் கூறினார்.

நிகழ்ச்சியில் .குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பேசியதாவது;
  எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்யப்படும் சேவையே உண்மையான சேவை. ஆன்மாவுக்கு அழிவில்லை. எனக்குள் இருக்கும் அதே உணர்வு ஆற்றலே ஒவ்வொருவரின் உள்ளேயும் குடி கொண்டு இருக்கிறது. கடல் நீர் ஒன்றாக இருந்தாலும், அது பல்வேறு அலைகளாக எழுவது போல, நாம் அனைவரும் ஒரே உணர்வின் வெளிப்பாடுகள் ஆவோம்.  அதில் லயித்து அமைதி பெறுதே தியானம். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உள்ள ஒரு ஆழமான உணர்வின் மீதே நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உரையாற்றினார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்