குருப்பெயர்ச்சி; நன்மை யாருக்கு.. பார்வையால் பலத்தால் பல கோடி பெற போவது யார்?



பராபவ ஆண்டு வைகாசி 12 (மே 26, 2026) காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். அங்கிருந்து ஐப்பசி 3 (அக்.20, 2026) மாலை 4:36 மணிக்கு சிம்ம ராசிக்குள்  செல்கிறார். அங்கிருந்து மாசி1 (பிப்.13, 2027) கடக ராசிக்குள் செல்கிறார். பிலவங்க ஆண்டு வைகாசி 30 (ஜூன் 13, 2027)ல் சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

நன்மை யாருக்கு
ஸ்தான பலத்தை விட அதாவது குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்வை பலமே அதிகம். மே26, 2026 முதல் ஐந்தாம் பார்வையால் விருச்சிகம், ஏழாம் பார்வையால் மகரம், ஒன்பதாம் பார்வையால் மீனம் ஆகிய ராசிகளுக்கு பார்வையால் நன்மை தருகிறார்.

பார்வை பலமும் ஸ்தான பலமும்
குருபகவான் 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் ஸ்தான பலத்தால் யோகம் தருவார். அவர் சஞ்சரிக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ம் பார்வைகளால் பார்க்கும் இடங்களுக்கு சுபிட்சம் உண்டாகும். ஸ்தான பலம் எதிர்மறையாக இருந்தாலும் அவர் பார்க்கும் இடங்கள் நன்மை பெறும். 

பார்வை பலம் 
விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை, 
உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதம், 
பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.

ஸ்தான பலம் 
மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம், 
உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்

வக்ர காலம்

மார்கழி 7 (டிச. 22, 2026) காலை 10:00 மணி – பிலவங்க வருடம் சித்திரை 7 (ஏப். 20, 2027) காலை 10: 30 மணி


12 ராசிகளுக்கான முழுபலன் அறிய கிளிக் செய்யவும்https://temple.dinamalar.com/rasi_palan.php?cat=576


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்