புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, தங்க சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
இவ்விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, நேற்று பிராமண மரபினர் சார்பில், காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து தங்க சூர்ய பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா,மாலையில் தங்க சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை வேதராமன், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.