குரு பெயர்ச்சி விழா கோவிந்தவாடியில் விமரிசை



காஞ்சிபுரம்: குரு கோவில்களில், நேற்று குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தன.

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், குரு பரிகார ஸ்தலம் என, அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. ஆதி குருவாக விளங்கும், மூலவர் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி அளித்து வருகிறார்.

நேற்று காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ச்சியானார். இந்த குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலு வலர் கதிரவன், கோவில் அறங்காவல் குழு தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் விழா குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதுப்பாக்கம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத கண்டீஸ்வரர் கோவில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நேற்று பிற்பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம். அதை தொடர்ந்து தீபாராதனை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது.

திம்மராஜாம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில், ரிஷி குருவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந் தது. இதையடுத்து, ரிஷி குருவிற்கு சந்தனகாப்பு மற்றும் வெட்டிவேர் அலங்காரம் நடந்தது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்