காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68வது மடாதிபதியான, பக்தர்களால் மஹா சுவாமிகள் என அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 133வது ஜெயந்தி மகோத்சவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வரும் 31ம் தேதி விமரிசையாக நடக்கிறது.
மகோத்சவத்தையொட்டி வரும் 29ம் தேதி முதல், தொடர்ந்து மூன்று நாட்களும் வேத பாராயணம், வித்வத் சதஸ், உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், மற்றும் இசை கச்சேரிகள் நடக்கிறது.
இதில், 31ம் தேதி காலை 7:00 மணி முதல், மஹா ருத்ர ஜப ஹோமமும், மதியம் 12:00 மணிக்கு பிருந்தாவனத்தில் மஹா அபிஷேகமும் நடக்கிறது.