தன் அழகை கண்ணாடியில் பார்த்த படி அருள்பாலித்த வரதராஜப் பெருமாள்



 புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்து வரும் 40 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட எம்பெருமான் தன் அழகை கண்ணாடியில் பார்த்து ரசித்தபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புதுச்சேரி காந்தி வீதி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.  25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவில் இன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட எம்பெருமான் தன் அழகை கண்ணாடியில் பார்த்து ரசித்தபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்