காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகாசி ஏகாதசி வைபவம்



கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகாசி சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.


பின்னர் கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை புண்ணியாவசனம் கலச ஆவாகனம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன ‌திருமஞ்சனம். இதில் நெய் தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் முடிந்து ரங்கநாதர் நீல நிற பட்டுஉடுத்தி  வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து உச்சகால பூஜை சாற்றுமறை மகாதீப ஆராதனை நடந்தது. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள்  அர்ச்சகர்கள், மிராசு தாரர்கள் திருக்கோவில் செயல் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்