செய்யூர் நாகாத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை



செய்யூர்: செய்யூர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.

செய்யூர் குளக்கரை பகுதியில், நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் முடிவு செய்து, இரு ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர்.

திருப்பணி முடிந்து, 5ம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் தொடங்கின. கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை என விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம், நேற்று காலை, 8:00 மணிக்கு நடந்தது. விமான கலசம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்