அத்திக்கோம்பையில் காளியம்மன் கோயில் திருவிழா; பூவோடு எடுத்து நேர்த்திக்கடன்



ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் கே.அத்திக்கோம்பையில் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது.

முதல் நாளன்று விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது‌. பல்வேறு ஸ்தலங்களில் இருந்து தீர்த்த கலசங்களில் கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தம் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கிராம தெய்வங்கள் வழிபாடு, கரகம் பாலித்தல் அம்மன் ஊர்வலம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சவடம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பொங்கல், மாவிளக்கு வழிபாடு நடந்தது. மஞ்சள் நீர் ஊர்வலத்தை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நடந்தது. முளைப்பாரி, வான வேடிக்கைகள் மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்