காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை



 காஞ்சிபுரம்; படுநெல்லி கிராமத்தில், பொன்னியம்மன், மாரியம்மன், கங்கையம்மன் ஆகிய மூன்று கோவில்களில் மஹா கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், பொன்னியம்மன், மாரியம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த மூன்று கோவில்களும் புதுப்பிக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா,  கடந்த 9ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இன்று காலை 8:00 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, பொன்னியம்மன் கோவில் கோபுர கலசத்தின் மீது, காலை 8:15 மணிக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியர் கும்பாபிஷேகம் செய்தார். இதையடுத்து, காலை 9:40 மணிக்கு மாரியம்மன் கோவில் கோபுரத்தின் மீது புனித நீரை ஊற்றி, சிவாச்சாரியர் மஹா கும்பாபிஷேகம் செய்தார். அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்