பொன்னேரி உஜ்ஜைனி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு



உடுமலை: பொன்னேரி அய்யம்பாளையம்புதுார் உஜ்ஜைனி மாகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.

உடுமலை அருகே பொன்னேரி அய்யம்பாளையம்புதுாரில், உஜ்ஜைனி மாகாளியம்மன் கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. அம்மனுக்காக, பக்தர்கள் முளைப்பாரி, தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வந்து செலுத்தினர். திருவிளக்கு வழிபாட்டுக்குப்பிறகு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால வேள்விக்கு பிறகு, காலை, 7:45 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 8:15 மணிக்கு விமானம் கும்பாபிேஷகமும், காலை, 8:30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்