ஆனி மாத பிறப்பு; பழநி முருகன் கோவிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை



பழநி,; பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு ஆனி மாத முதல் நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ஆனி மாத முதல் நாளை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் விநாயகரை தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்