விழுப்புரம்: விழுப்புரம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி சுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரம் எம்.ஜி., ரோடு, மீன் மார்க்கெட் அருகே அங்காளம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை யொட்டி, சுவாமிக்கு மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.