திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் தைல பிரதிஷ்டை மகோத்ஸவம்



திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூன் 20 ல் ஜேஷ்டாபிஷேக தைல பிரதிஷ்டை மகோத்ஸவம் துவங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் மூலவர் சன்னதியில் அவரது திருமேனிக்கு ஆண்டுதோறும் தைல பிரதிஷ்டை நடக்கும். ஜூன் 20 அன்று மாலையில் பூர்வாங்க பூஜைகளுடன் துவங்குகிறது. ஜூன் 21 காலை காலை 8:00 மணிக்கு யோகநரசிம்மர் சன்னதி மண்டபத்தில் யாகசாலையில் மகாசாந்தி ேஹாமமும் நடைபெறும். மறுநாள் தைலம் திருவீதி உலா நடைபெறும். யாகசாலையில் தைலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தைலத்திற்கு பூஜைகள் நடைபெறும். ஜூன் 24ல் காலை 9:23 மணிக்கு மேல் 10:36 மணிக்குள் பெரிய பெருமாள் மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தைலத்தால் அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து ஜூன் 20 முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மூலவர் திருமுகத்தை மட்டுமே பக்தர்கள் தரிசனம்செய்ய முடியும்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்