வாடிப்பட்டி; சமயநல்லுார் அருகே தோடனேரியில் அரியநாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 11ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 4ம் காலயாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் பங்காளிகள் மற்றும் பெண்ணடி பிள்ளைகள் செய்திருந்தனர்.
கொண்டையம்பட்டி அருகே பெருமாள்பட்டியில் பட்டவன், முனியன், பிச்சாயி, மரத்தி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து கடம் புறப்பாடானது. வேத மந்திரங்கள் முழங்க அம்மன், சுவாமி பீடத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாதவ அய்யன் கருப்பசாமி, பட்டவன் சுவாமியை குலதெய்வமாக வழங்கும் பங்காளிகள் மற்றும் மாமன், மைத்துனர்கள் செய்திருந்தனர்.