தேவகோட்டை; சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் கண்ட தேவியில் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இப்பகுதியின் கண்ணணையாகிய தென்னிலை நாடு, உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு, இறகுசேரி நாடு என நான்கு நாட்டைச் சேர்ந்த 170 கிராமங்களுக்கு தலைமை கோயில். இக் கோயில் ஆனித் திருவிழா நடைபெறுகிறது. துவக்க நாளான இன்று அதிகாலை கொடி நகர்வலம் வந்து கொடிக்கு பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 7:32 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவர்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகங்கை தேவஸ்தானம் கண்காணிப்பாளர் சரவணன், டி.எஸ். பி. கண்ணன், உள்ளூர் கண்டதேவி சேர்ந்தவர்கள், நான்கு நாட்டைச் சேர்ந்த கிராமத்தினர் பங்கேற்றனர். இரவு 7 மணியளவில் திருவிழாவிற்கான காப்பு கட்டப்பட்டது. சுவாமிகள் கேடக வாகனத்தில் உலா நடந்தது.
போலீஸ் பாதுகாப்பு: தேவகோட்டை டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில் கண்டதேவி கிராமம், தேர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் முகப்பில் போலீஸ் கண்ட்ரோல் ரூம் தொடங்கப்பட்டுள்ளது.