சின்னமனூர்; சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது.
சின்னமனூரில் மாணிக்கவாசகர் நின்ற கோலத்தில் குரு அம்சத்தில், ருத்ராட்சம் அணிந்து வலது கையில் ஜபமாலையுடனும் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏட்டுடனும் உள்ளார். மாணிக்க வாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சிகள் கடந்த ஜூன் 12 ல் துவங்கியது . திருவிழா நடைபெற்ற 11 நாட்களும் மாலையில் மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். ஆனி திருமஞ்சன விழாவில் மாணிக்கவாசகர் குரு பூஜை நேற்று நடைபெற்றது. முக்கனிகள் இடம் பெற்ற அன்னதானம் நடந்தது. நாளை ( ஜூன் 21 ல் ) ஆனி உத்திரம் மற்றும் நடராசருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை ஆனித் திருமஞ்சன திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவில் மூன்று உற்சவர்கள், விநாயகர், சிவகாமியம்மன், நடராசர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகருக்கு பிரத்யேக மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா , பரம்பரை அறங்காவலர் திருவாசகம், தமிழாசிரியர்கள் வெங்கடாச்சலம் , வேலு ஆகியோர்கள் செய்திருந்தனர்.