விழுப்புரம் முத்தால் வாழியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்



விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் முத்தால் வாழியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இக்கோவிலில், இந்தாண்டு வைகாசி மாத உற்சவம் கடந்த 12ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி, மதியம் 1:00 மணிக்கு தேரில் அம்மன் எழுந்தருளியதைத் தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். மாலை 5:00 மணிக்கு கோவில் முன்பு செடல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் அலகு குத்தியும், செடல் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்