திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்



திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், சிவகாமி அம்மையார், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகாலம் என அழைக்கப்படும், தை மாதம் முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களில், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில், ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்.  அதன்படி இன்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நடராஜர், சிவகாமி அம்மன், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர், அங்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்