பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமிநாத ஓதுவாருக்கு காஞ்சியில் பாராட்டு விழா



காஞ்சிபுரம்: காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம், நால்வர் நற்றமிழ் மன்றம், தெய்வத்தமிழ் மாமன்றம் ஆகிய முப்பெரும் மன்றத்தார் சார்பில், ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமிநாத ஓதுவாருக்கு பாராட்டு விழா காஞ்சியில் நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார்.

கா ஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் தலைவர் பூவேந் தன் வரவேற்றார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் கதிரவன், பேராசிரியர் மோகனவே லு, கவிஞர் அண்ணா, சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நி கழ்ச்சியில், பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமிநாத ஓதுவாருக்கு மலர் மகுடம் சூட்டி, பொன்னா டை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

தொடர்ந்து, தெய்வத்தமிழ் மாமன்ற நிறுவனர் ராமலிங்கம், பேராசிரியர் அருணை பாலறாவாயன், பிரபாகர மூர்த்தி ஆகியோர் சுவாமிநாத ஓதுவாரின் ஆன்மிக மற்றும் திருமுறைப் பணிகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

பாராட்டை ஏற்றுக்கொண்ட பத்மஸ்ரீ சுவாமிநாத ஓதுவார் ஏற்புரை நிகழ்த்தினார். நால்வர் நற்றமிழ் மன்ற செயலர் வேளியப்பன் நன்றி கூறினார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்