திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி விழா



திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று காலை 10:30 மணிக்கு அஷ்ட பைரவ மகாயாகம் பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் துவங்கியது.  யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் விபூதிக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்