திருப்பூர், குருநாதம்பாளையம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு தாலுகா, உகாயனுார், குருநாதம்பாளையத்தில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஜூன் 21ம் தேதி முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இன்று 24-ம் தேதி அதிகாலை 5:45 மணி முதல் 6:45 மணிக்குள் மஹா மாரியம்மன் மற்றும் ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், மஹா மாரியம்மன், கன்னிமார் கருப்பராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இதில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.