கோவை : கோவையின் 500 ஆண்டு பழமையான பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கோவையில் மைசூர் மன்னர்கள் ஆண்ட காலத்தில் மருதைய்ய மற்றும் யதார்த்தி ஆகிய இரு சகோதரர்கள் கோவை அடுத்த பகுதியை ஆண்டு வந்தனர். அந்த சமயத்தில் கோவையின் பேட்டை பகுதியில் நர்மதை நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட நர்மதை பாணலிங்கமாக எழுந்தருளியுள்ள விஸ்வேஸ்வரர் கனவில் வந்து சந்நிதி அமைக்க கேட்டுக் கொண்டதும் சிவநேய செல்வர் சிவ தீர்த்தம் என்பவர் மூலம் கேள்விப்பட்டு யதார்த்தி சகோதரர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து சுவாமி விஸ்வேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் கருங்கல் திருப்பணியில் பெரிய கோவிலாக வடிவமைத்து பொதுமக்கள் வழிபாட்டுக்கு இந்த கோவிலை கொடுத்தனர் பின்னர் கோவை மான் கோவையை ஆட்சி செய்த மாதையன் அவர்களால் இக்கோவிலை சுற்றி வீதிகள் அமைக்கப்பட்டன இன்றும் சிறப்புடன் விளங்கும் ராஜவீதி அதற்கு சான்று ஆகும். பின்னர் மைசூர் மகாராஜாவின் பிரதிநிதியான மாதே ராஜா அவர்களால் திருப்பணி செய்யப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகள் நடந்து வருகிறது. இக்கோவிலில் இன்று ஜூன் 24ல் கும்பாபிஷேகம் பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.