பொகலூர் வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா



அன்னூர்; பொகலூர், வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.

பொகலூரில், கன்னிமார், கருப்பராயன் மற்றும் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பாலகணபதி மற்றும் பாலமுருகன் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது. பல்வேறு நதிகளில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்துவரப்பட்டு வேள்வி பூஜை 22ம் தேதி மாலை வரை நடந்தது. 23ம் தேதி இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 10: 00 மணிக்கு, வீரமாத்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பேரூராதீனம், சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பங்கேற்றனர். இதையடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்